பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள 129 சந்தேக நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார்.
அவர்களுள் 40 போ் இலங்கையில் நடைபெற்ற பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் தேடப்பட்டு வருபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வேறுபல குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 87 பேருக்கு சர்வதேச காவல்துறையினா் நீல எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #சிவப்பு_எச்சரிக்கை #அஜித்_ரோஹண #மோசடிகள்