Home இலங்கை மருமகன் இறந்த சோகத்தில் மாமனார் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மருமகன் இறந்த சோகத்தில் மாமனார் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

by admin
mage hanging rope to Lynch’s loop on a white background

மருமகன் உயிரிழந்த சோகத்தில் வாடிய குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  உரும்பிராய் மேற்கை சேர்ந்த செல்லக்குட்டி தவச்செல்வம் (வயது 48) என்பவரே உயிரிழந்தவராவார். 


இவரது மருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற வேளை காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


மருமகனின் இழப்பால் மிகவும் துவண்டு போயிருந்த மாமனானர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக உறவினர்கள் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர். #மருமகன் #சோகத்தில் #மாமனார் #உயிர்மாய்ப்பு #தூக்கில்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More