டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது மூலிகைச் செடிகளையும் அழிக்கின்றார்கள் என சித்த மருத்துவர் ஒருவர் கவலை தெரிவித்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பற்றைக் காடுகளை அழிக்கின்றார்கள். அதன் போது அவற்றினுள் காணப்படும் மூலிகைக் செடிகளும் அழிக்கப்படுகின்றன.
அதனால் மூலிகைச் செடிகள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு விளக்கம் கொடுக்கவும் , மூலிகை செடிகளை அடையாளம் காணவும் உரியவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதன் ஊடாகவே மூலிகை செடிகளை அழியாது காக்க முடியும். யாழில் பெருமளவான மூலிகை செடிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியுள்ளவற்றை ஆவது பாதுக்காக்க உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளார். #டெங்கு_ஒழிப்பு #மூலிகை_செடி #சித்தமருத்துவர்