தனது நாட்டு தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக தொிவித்து பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதிப்பதா நேற்று வியாழக்கிழமை இரவு அறிவித்துள்ளது.
கொரோனா வைரசினை சீன அரசு கையாண்ட விதம் மற்றும் வீகர் இன சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பில் பிபிசி வெளியிட்டிருந்த செய்தியினை தொடா்ந்தே சீனா இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
சீன அதிகாரிகளின் இந்த முடிவு தங்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி என்பது நம்பகத்தன்மையான செய்தி நிறுவனம் ஆகும். உலகெங்கிலும் உள்ள செய்திகளை நியாயமாகவும் பாரபட்சமின்றி, எந்தவித ஆதரவும் இல்லாமல் வழங்கி வருகிறது
இந்தத் தடை சீனா மற்றும் பிாித்தானியாவுக்கிடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளதைக் காட்டுவதாக பிாித்தானியா தெரிவித்துள்ளது. #BBC #பிபிசி_தொலைக்காட்சி #சீனா #தடை