194
ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் , அவரது நண்பர்கள் மற்றும் யாழ்.ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் உயிரிழந்தார்.- #ஊடகவியலாளர்_சத்தியமூர்த்தி #நினைவேந்தல் #அஞ்சலி #இறுதி_யுத்தம்
Spread the love