வழக்காறுகள் என்பது சடங்குகள், கலைமரபுகள், நம்பிக்கைகள், பேச்சு வழக்குகள், வாய்மொழிப்பாடல்கள், கைவினை மரபுகள், பாரம்பரிய உற்பத்தி முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள், பாரம்பரிய வைத்திய முறைகள், பாரம்பரிய பொருளாதார முறைகள், உள்ளுர் வாத்தியக்கருவிகள் அவை உருவாக்கப்படும் முறைமைகள் உள்ளுர் கலை வரலாறு என அனைத்தும் உள்ளடக்கியதாகும். இவை வெறுமனே கலைவடிவங்களோ சடங்கு வடிவங்களோ வாழ்வியல் முறைகளோ மட்டுமல்ல. அவை சமூகங்களின் நிகழ்கால அரசியலை பேசுபவையாக உள்ளன. கூட்டு மனங்களினால் உருவாக்கப்பட்டு கூட்டுமனங்களாலே நிகழ்த்தப்படுகின்றன.
குறிப்பாக இன்றைய சூழலில் வழக்காறுகள் மக்களின் விடுதலை பேசும் கருவிகளாகவும், மக்களை ஆற்றுப்படுத்தும் கலைவடிவங்களாகவும் சமூக அறிவியலாகவும் இயங்குகின்றன.
இவ் வழக்காறுகளைச் சேகரித்தல் தொகுத்தல் ஆய்வு செய்தல் என்பது காலனிய ஆட்சியுடன் ஆரம்பமாகின்றது. காலனியம் தன் அதிகாரத்திற்குட்பட்ட மக்களை அறியவும் கட்டுப்படுத்தவும் வழக்காறுகளைப் பயன்படுத்தியுள்ளது. மக்களின் நடத்தைகள் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கொள்ள வழக்காறுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை ஆய்வுசெய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மக்கள் வழக்காற்றியல்; துறை என்பது ஆசிய ஆபிரிக்க நாடுகளில் மேற்கைரோப்பிய அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதொன்றாகும். காலனிய நாடுகளின் பண்பாட்டினை அறிந்துகொள்ளவும் அதன் மூலமாக மக்களை புரிந்து கொள்வதன் வழி அவர்களை கட்டுப்படுத்தவும் அதிகாரம் செய்யவும் வழக்காறுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் தங்களின் பண்பாட்டு அறிவியல் முறையிலிருந்து காலனிய நாடுகளின் பண்பாட்டு அறிவியலினை ஒப்பாய்வு செய்தது. இதன் விளைவாய் தங்களிலிருந்து வேறுபாடான பண்பாட்டினை நாகரீகமடையாத பண்;பாடாகக் கணித்தது.
மேற்கத்ததைய மக்களும் அறிவியல் முறைமையும் ஐரோப்பியர் அல்லாத மக்களை தங்களது ஊகங்களாகவே காணுகின்றனர். சிறப்பான வாழ்கை முறையற்றவராய் தங்களுக்கு கீழான நாகரீகமற்றவர்களாகவே ஆய்வு செய்யப்படுகின்றனர். எனவே அறிவியலை, நாகரீகத்தினை கற்றுக்கொடுக்கவும் பரப்பவும் காலனியம் வழிசெய்தது. அரசியல், சட்டம், அறிவியல், பொருளாதரம், கலை, இலக்கியம், வரலாறு அனைத்தும் காலனியம் தன் அறிவுப் பொறி முறையில் உற்பத்தி செய்தது. சிந்தனைகளாக கோட்பாடுகளாக பரவலாக்கியது. ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் உடல்களும் பண்பாடுகளும் காட்சிக்குரியதாக காலனியம் மாற்றியது. எனலாம்.
வரலாற்றுப் போக்கில் மக்கள் வழக்காறுகள்.
1960 களில் தமிழகத்தில் மக்கள் வழக்காறுகள் தனித்த துறையாக ஆய்வுத்தளங்களில் ஆய்வுப் பொருளாக பயன்படுத்தப்படத் தொடங்குகின்றது. 1967 களில் நா.வானமாமலை ஆராய்ச்சி என்னும் காலாண்டிதழில் மக்கள் வழக்காறுகளை ஆய்வுப் பொருளாகக் கொண்டு சமூகப்பண்பாட்டு பின்புலத்தில் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. தே.லூர்து பல்கலைக்கழகச் சூழலில் தனித்துறையாக உருவாக்குவதோடு வழக்காறுகள் சார்ந்த கோட்பாடுகளை தமிழில் அறிமுகம் செய்கின்றார்.
இலங்கையில் 1955 களின் பிற்பகுதியில் இருந்து வழக்காறுகளை சேகரிக்கும் போக்கு உருவாகின்றது. குறிப்பாக இலங்கைச் சூழலில் தேசியம் தொடர்பான சிந்தனை வழக்காறுகள் பற்றிய தேடலுக்கு அடிப்படையாகின்றது. க.கணபதிப்பிள்ளை, ஈழத்துப் பூராடனர், வி.சி.கந்தையா, மு.இராமலிங்கம், சி.வி வேலுப்பிள்ளை, பேராசிரியர் க. கைலாசபதி, சு.வித்தியானந்தன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அவர்களைத் தொடர்ந்து எஸ்.முத்துமீரான், மாத்தளை வடிவேலன். திரு.ஆ.யு.நடராசா, திரமதி.செல்லம்மா முத்தையா, செல்வி திருச்சந்திரன், செல்வி. கங்கேஸ்வரி, பாலசுந்தரம் போன்ற ஆளுமைகள் வழக்காறுகளை சேகரித்து தொகுத்துள்ளமையை அவதானிக்கலாம். இவை தங்கள் துறைசார் ஆய்வுகளில் ஒரு பகுதியாகவும் சுயவிருப்பின் அடிப்படையிலும் தொகுத்துள்ளமையை அறியமுடிகின்றது.
1995 களின் பின்னர் கருத்தியல் மற்றும் செயற்பாட்டுத்தளங்களில் மட்டக்களப்பில் வழக்காறுகள் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெண்ண்pயச் சிந்தனை, காலனிய நீக்கம் போன்ற சிந்தனைகள் சமூகச் செயற்பாட்டில் வலுப்பெறுகின்றன. 2000 களில் மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுகளுக்கான நண்பர் குழு, சூரியாப்பெண்கள் நிலையம், போன்ற தன்னார்வ அமைப்புகளின் செயற்பாடுகள் முக்கியம் பெறுகின்றன. வாய்மொழி மரபுகள், பண்பாட்டு வடிவங்கள் பெண்ணிய நோக்கில் அணுகப்பட்டன. அத்தோடு உள்ளுர் பண்பாட்டு வடிவங்கள் காலனிய நீக்கத்திற்கானதாய் மூன்றாவது நண்பர் குழுவினால் முன்வைக்கப்படத் தொடங்குகின்றது.
2001 களில் தொடங்கப்பட்ட கூத்து மீளுருவாக்க தொடர் செயற்பாடு இன்றைய சூழலில் பாரம்பரிய கலை, வாழிவியல் பழக்க வழக்கங்களின் தேவைப்பாட்டினை முன்வைத்ததோடு அதன் தனித்துவமான வித்தியாசங்களோடு முழுமனித வாழ்விற்கானதாய் முன்வைத்தலை செயற்பாட்டுத்தளத்தில் சாத்தியமாக்கியது.
2000 களில் ‘வாய்மொழி மரபுகள் வரலாற்று மூலங்களாக…..’ கிழக்குப்பல்கலைகழத்தில் தமிழ்த்துறை வாய்மொழி தொடர்பாக கவனம் செலுத்தத் தொடங்கியது. 2005 களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்தறை கூத்தரங்கினை மையப்படுத்தியதாய் தனக்கான அரங்ககாக வடிவமைக்கத் தொடங்கியுள்ளது. பல்கலைகழகத்திற்கு வெளியே கலாச்சாரத்திணைக்கழகம் பண்ணாட்டு ஆய்வு மாநாடுகள், அண்ணாவியார் ஆய்வு மாநாடுகள் போன்றவற்றினை நடத்தியதோடு உள்ளுர்க்கலைஞர்கள் அடையாளப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கையில் சுவாமி விபலானந்த அழகியற்கற்கை நிறுவகத்தில் தொட்டுணரா பண்பாட்டு ஆய்வு மாநாடு 2015களிலிருந்து 2017 வரையான காலப்பகுதியில் இடம் பெற்றது. இவ் ஆய்வு மாநாடு உள்ளுர்பண்பாடு சார் செயற்பாட்டினை கருத்தியல் அடிப்படையில் முன்னெடுப்பதற்கான அடிப்படையாகவும் பண்பாட்டின் பல்தன்மைகளை முன்வைத்தாகவும் உலகப்பொருமையின் அடிப்படையில் வழக்காற்றின் தேவைகளை முன்வைப்;பதாக அமைந்துள்ளது.
‘மக்கள் வழக்காற்றியல’; தனித்துறை உருவாக்கலின் தேவை.
மட்டக்களப்பில் மக்கள் வழக்;காறுகள் தொடர்பான ஆய்வுகளும் பதிவுகளும் 1960 களிலிருந்து ஆரம்பமாகின்றது. இவை சமூகத்தில் இயங்கும் இலக்கிய மன்றங்களினால் நாட்டர் பாடல், நாட்டார் கதைகள் என தொகுக்கப்பட்டுள்ளன. அத்தோடு சமூகத்தில் பாரம்பரிய அரங்குகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஆய்வுப் பரப்பில் வழக்காறுகள் இலக்கியமாய் உணரப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பாரம்பரிய அரங்கு சார் செயற்பாடுகளும் பாரம்பரிய கலைவிழாக்களும் நிகழ்த்தப்படுகின்றன. சமூயமயப்பட்ட ஆய்வுகள் கூத்;துகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்கலாம். இவை தனிமனித ஆவல் சார்ந்த முயற்சியிலும் வௌ;வேறு கோணங்களில் வௌ;வேறு தேவைகள் கருதியும் ஒவ்வாரு காலப்பகுதியிலும் இடம்பெற்றுவந்துள்ளன.
கலைமன்றங்கள், இலக்கியப் பனுவல்களாக, இலக்கியமாக கலை மரபுகளாக தொகுத்துள்ளனர். உள்ளுர்க் கோயில்களின் தல வரலாறுகளாக உள்ளுர் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான வெளியீடுகளும் ஆய்வுகளும் திட்டம் திட்டமாக மக்கள் வழக்காறுகளை சேகரித்தும் தொகுத்தும் ஆவணப்படுத்தியும் வந்துள்ளமையை அறியலாம். இலக்கியமாக நிகழ்கலையாக வரலாறாக, இலக்கிய ரசனை, இலக்கிய ஆளுமை ரீதியான பதிவுகளாகவே இடம்பெற்றுள்ளன.
உலக வரலாற்றில் காலனிய நீக்கத்திற்கான முன்மாதிரியாய் மக்கள் வழக்காறுகள் முன்வைக்கின்றனர். பின்லாந்தில் நாடோடிக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய காவியம் உருவாக்கப்பட்டமை. நைஜீரியா வரலாறு என்பது அவ் நாட்டின் வாய்மொழி வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபபட்டு வரும் ஒரு செயற்பாட்டுப் போக்கினை அவதானிக்க முடிகின்றது. (ணுயுசுஐயு துழுருசுNயுடு ழுகு டுஐடீசுயுடு யுசுவுளு, டீநடடழ ருniஎநசளவைஇ ணுயசளை-Nபைநசயை) ரோமிலா தர்பார் போன்ற ஆளுமைகள் வாய் மொழி ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்றினை கேள்விக்கள்ளாக்கியும் மக்கள் சார்ந்து வரலாற்றினை முன்வைக்கத் தொடங்கிருக்கிறார்கள்.
4
இத்தகை வரலாற்றுப் பின்னணியில்; இலங்கையில் குழடமடழசந என்னும் போது தேசியம் பேசுதல், சாதியம் பேசுதல், என்னும் விமர்சனங்களுக்கு இட்டுச் செல்கின்றது. குழடமடழசந தான் இவற்றினை மேலும் ஆழப்படுத்துவதாகவும் மேற்கிளப்படும் விமர்சனங்களையும் காணலாம். ஆனால் இன்றைய சூழலில் நம் வாழ்தலிருந்து நாம் வாழும் சூழலிருந்து தம் கல்வி முறை நம் கோட்பாடுகள் நாம் பின்பற்றுபவை எத்தகைய ஆரோக்கியமான அறிவியலை புலமையை உருவாக்கியுள்ளது? சுயாமான வாழ்தலை வன்முறையற்ற சூழலை உருவாக்கியுள்ளதா? போன்ற கேள்விகளையும் உரையாடல்களையும் நம் அறிவுப்புலங்களிலிருந்து எழுப்ப வேண்டியவர்களாய் உள்ளோம்.
இன்றைய வாழ்தல் பொருட்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது வெறும் நுகர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு மனிதரையும் தனிமைப்படுத்தியுள்ளது. சேர்ந்து வாழுதல், கூட்டு வாழ்தல், என்பதனை சாத்தியமற்றதாய் மாற்றிவருகின்றது. காலனிய அறிவு நவீன அறிவின் ஊடாக வாழ்வியலிருந்து உள்ளுர் அறிவியலை விஞ்ஞானரீதியற்றதாய் காரண காரிய அறிவின் வழி அனுபவ அறிவினை பொய்ப்பித்தது. அவை கோட்பாடுகளாகவும் உருவாக்கப்பட்டன.
மக்களின் அழகியலை செம்மையற்ற வடிவங்களாக அழகியல் படுத்தவும் செம்மையாக்கவும் முனைந்தது. இதன் வழி மக்கள் வழக்காறுகளை சேகரிக்க பாதுகாக்க முனைந்ததே தவிர அவ் மக்கள் வாழ்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றே கூறலாம். மக்களை விடுத்த கலை பற்றியதான ஆய்வுகளாகவே காலனிய அறிவு மாற்றியது. சிறு உற்பத்தி என்பது உள்ளுர் பண்பாட்டுடன் மக்களின் வாழ்வியலுடன் இணைந்தது. இத்தகைய உள்ளுர் உற்பத்திகள் குறிப்பிட்ட சாதி, குடி வழக்குகளுடன் தன்னை இணைத்துக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.
நெசவுத் தொழில் முறை அதன் அறிவு மரபு, மட்பாண்டத் தொழில் முறை, மீன் பிடி, பிரம்புத் தொழில் முறையும் அதன் அறிவியலும், பாய் இழைத்தல் போன்ற பன்னுடன் தொடர்புடைய பனையினை அடிப்படையாகக் கொண்ட தொழில் முனைவுகள். இவை பிரதேசம் சாதி வழக்குகளுடன் தொடர்புடையவையாய் காணப்பட்டன. தங்களுக்குள் பரிமாறும் பண்;டமாற்றும் பொருளாதார முறையினைக் கொண்டவையாகவும் செயற்பட்டன. தங்களுக்கான ஊரினை பிரதேசத்தினை மையப்படுத்த்pய சந்தைகளை கொண்டவைகளாகவும் காணப்பட்டன. இத்தகைய உள்ளுர் உற்பத்திகளை சாதிகளைத் தூண்டுபவையாயய் சாதியம் பேசி இல்லாமல் ஆக்கியமை காலனிய அறிவைச் சார்ந்தது.
இவற்றிக்குப் பதிலாய் இறக்குமதி உணவு உற்பத்தி பொருட்கள், அலுமினியம், இறப்பர், உற்பத்திகள் சந்தைகளை ஆக்கிரமித்தன. சூழலுக்கான பிரதேசத்திற்கான உற்பத்தி முறைகளுக்குப் பதிலாய் எல்லாப் பொருட்களும் எங்கும் கிடைக்கும் என்னும் பொருளாதாரம் இத்தகைய உள்ளுர் உற்பத்திகளை இல்லாமல் செய்தது.
இத்தகைய பொருளாதார மாற்றங்கள் பண்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன. உழவு, சூடு விதைப்பு என்பனவற்றிக்குப் பதிலாய் இயந்திரமயமாக்கல் பாரம்பரியமான வயல் வெட்டு அதனுடன் ஒட்டிய வாழ்வியல்; முறையினை இல்லாமல் செய்துள்ளது. இயத்திரமயமாக்கல் நம் சுற்றச் சூழல் சார் அறிவினை கலைமரபினை அழகியல் பற்றிய அறிவினை பாரம்பரிய தொழிநுட்ப அறிவியலை வருவாய் அற்றதாய் பயன்பாட்டிற்கு அற்றதாய் வருமானம் ஈட்டித்தராத ஒன்றாய் நம்பவைத்தது.
இத்தளத்திலே நாம் நம்மைப்பற்றி நாம் வாழும் சூழல் சார்ந்து சிந்திக் வேண்டியவர்களாய் உள்ளோம். நம் பண்பாட்டு மரபுகள் சார் மக்கள்மயப்பட்ட ஆழமான ஆய்வுகளும் செயற்பாடுகளும் அவசியமானது. இச் சிந்தனையின் அடியாகவே மக்கள் வழக்காற்றியல் துறையின் உருவாக்கத்தின் அவசியம் உணரப்படவேண்டியதாகின்றது. ஆற்றல் மிக்க. சுயஆளுமை திறன் கொண்ட மாணவ உருவாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பல்கலைக்கழகங்கள் தான் வாழும் சூழல், பண்பாடு சார் அறிவினை வழங்குவதோடு சமூகம் சார் அறிவினை கொடுப்பதும் சமூகப் பண்பாட்டினை புரிதலுடன் அதில் ஈடுபடும் தலைமுறையினரை உருவாக்குவதும் கடப்பாடாகின்றது.
வழக்காறுகள் சார்ந்து திட்ட திட்டமாய் செயற்பட்ட செயற்பாட்டினை ஒருமிக்க கலந்துரையாடுவதற்கும் வௌவேறு பிரதேசங்களின் பண்பாட்டு வேற்றுமைகளை புரிவதும் விளங்கிக் கொள்வதும் அவசியமானது. நிகழ்கலை சார்ந்து கற்கும் மாணவர்கள் தன் சூழலில் மக்களால் ஆடப்படும் பாரம்பரிய நிகழ்த்து கலைகள் பற்றி அறிவதும் ஆய்வு செய்வதும் கற்றலில் முக்கியமானது. ஓவியம், சிற்பம், கட்டடம் போன்ற கலைகளில் ஈடுபடும் கற்கும் மாணவர்களும் ஆளுமைகளும் தன் சூழலில் உள்ள உள்ளுர் அலங்காரங்கள் கட்டட மரபுகளோடு; சமூகத்தின் வீட்டமைவுகளை தேடவேண்டியவர்களாகவும் எங்களது வாழ்வியலில் கொண்டுவர வேண்டியவர்களாகவும் உள்ளோம்.
எங்களது பாரம்பரிய விவசாய முறைமை அதனை ஒட்டிய எங்களது வழக்காறுகள் என ஒவ்வொரு விடயம் சார்ந்தும் செயற்படவேண்டியவர்களாய் உள்ளோம். இதற்கான உத்வேகத்தினை அளிக்கவும் பொதுத் தளத்தில் கொண்டுவரவும் வினைத்திறன் கொண்ட செயற்பாடுகளை கட்டியெழுப்பக் கூடிய துறையாக மக்கள் வழக்காற்றியல்த் துறை என்பது அவசியமாகின்றது. இதனை உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாய் நாம் உள்ளோம்.
சடங்கினை சடங்காக அதன் இயக்கத்தினை ஆய்வு செய்யவும் அவற்றில் உள்ள பால்நிலை பாரபட்சங்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்றி முன்னெடுப்பதற்கான உந்துசக்தியாக செயற்படுவதற்கும் அதனை ஆய்வுப்பரப்பில் செயற்பாட்டுத் தளத்தில் முன்னெடுக்கும் மாணவர்களை உருவாக்கவதும் அவசியமானது. ஆனால் நமது அறிவு என்பது ஐரோப்பிய கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் கொண்டாடுபவர்களாக பின்பற்றுபர்களாக வடிவமைத்துள்ளது. நாம் நமக்கான சூழலில் ஆய்வு செய்யும் நம் அறிவியல் மரபினை விளங்கிக் கொள்ளும் அறிவு மரபின்
உருவாக்கம் என்பது சுயமான கற்றலின் அடிப்படையாகின்றது. இத்தகைய அறிவுப்போக்கின் அடிப்படையாக மக்கள் வழக்காறுகள் தொடர்பான கற்கை நெறிகள் கலை மற்றும் சமூகவியல்த்துறைகளில் இணைக்கப்படுதலும் மக்கள்வழக்காற்றியல்த் துறை தனித் துறையாக உருவாக்குதலும் இன்றைய சமூகச் சூழலின் தேவையாகின்றது.
உசார்த்துணை நூற்பட்டியல்
- வாய்மொழி இலக்கியம், யாழ்பாண பிரதேசக் கலைமன்றம், நாட்டுப்பாடல் நாடகக் குழு, 1961.
- ஏம்.டி.முத்துக்குமாரசாமி., நாட்டார் வழக்காற்றியல்-2, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கழகம், பெருமாள் புரம், திருநெல்வேலி-07.
- நா.வானமாமலை., தமிழர் நாட்டுப்பாடல், நீயு செஞ்சுரி புக் கவுஸ், சென்னை,1969.
- முத்தையா.இ., அடித்தளமக்களின் குறியீட்டுப் பயண வெளிகள், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பி (லிட்), சென்னை, 2010.
- மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல் ஆய்வு, மருதூர் வெளியீட்டுப் பணிமனை, சாய்தமருது,2007.
- டி.தர்மராஜன்., தழிழ் நாட்டுப்புறவியல், புலம், 2011.
- கே.ச.சேவியர் அந்தோணி., ஈர்ப்பு விசை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 2008.
- ரொமிலா தாப்பார், (மொழி), வானமாமலை.நா, வரலாறும் வக்கிரங்களும்,நியு செஞ்சுரி புக் கவுஸ்,2008.
- ZARIA JOURNAL OF LIBRAL ARTS, Vol.3, No.01, April 2009, Faculty of arts, Amadu Bello University, Zaria-Nigeria.
…… …….