கொவிட் பரவலையடுத்து, திருமண நிகழ்வுகள், இறுதிச்சடங்கு நிகழ்வுகள், இரவு நேர களியாட்டங்கள் போன்றவற்றினை நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்க 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமையானது 50 பேராக குறைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை 24 மணித்தியாலத்தினுள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா். #கட்டுப்பாடுகள் #கொவிட் #திருமணநிகழ்வு #இறுதிச்சடங்கு #சுதர்ஷனி_பெர்னாண்டோபுள்ளே