மியன்மாரில் போராட்டம் மேற்கொள்பவா்களால் இராணுவத்தினருக்கு இடையூறு விளைவிக்கப்படுமாயின் அவர்களுக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாட்டின் பல்வேறு நகர வீதிகளில் இராணுவத்தினரின் ஆயுதமேந்திய போர் வாகனங்கள் அதிகளவில் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
அங்கு நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நாடுமுழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தை ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை மூலம் ராணுவம் கைப்பற்றியிருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனினும் அந்த தேர்தலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக தொிவித்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியினைக் கைப்பற்றியதுடன் தற்போது ஆங் சான் சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் இராணுவ மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #மியன்மாரில் #போராட்டம் #சிறைத்தண்டனை #அபராதம் #ஆங்சான்சூச்சி