வலிகாமம் மேற்கு சங்கானை கலாச்சார மத்திய நிலையத்தில் 2021ஆம் ஆண்டுக்கான கலை , வாத்தியங்கள் மற்றும் மொழி சார்ந்த பாட நெறிகள் ஆரம்பமாகவுள்ளன.
கர்நாடக சங்கீதம் , பரதநாட்டியம் , ஓவியம் , மிருதங்கம் , ஆங்கிலம் சிங்களம் மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடநெறிகள் இலவசமாக கற்பிக்கப்படவுள்ளன.
குறித்த பாடநெறிகளை கற்க விரும்புவோர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் திங்கட்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் சங்கானை பட்டின சபை வீதியில் அமைந்துள்ள கலாச்சார மத்திய நிலையத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூரணப்படுத்தி விண்ணப்பிக்க முடியும் என கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். #இலவச_வகுப்புகளுக்கு #விண்ணம் #சங்கானை