சிறுமியை கடத்தி சென்று இரு மாதங்கள் குடும்பம் நடாத்திய இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கொடிகாமம் காவல்துறைப்பிரிவில் வசித்து வந்த 17 வயது சிறுமியை அராலி பகுதியை சேர்ந்த இளைஞன் கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு மாதங்களாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த கொடிகாம காவல்துறையினா் நேற்று முன்தினம் இளைஞனையும் சிறுமியையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் காவல்துறையினா் முற்படுத்திய வேளை , இளைஞனை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும் , சிறுமியை சீர் திருத்த பள்ளியில் சேர்க்குமாறும் மன்று உத்தரவிட்டது. – #சிறுமி #கடத்தி #விளக்கமறியல் #சீர்திருத்தபள்ளி