181
வீதியில் வெற்றிலை துப்பிய பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மட்டுவில் கிழக்கை சேர்ந்த கந்தசாமி ஞானேஸ்வரி எனும் பெண்ணே உயிரிழந்தவராவர்.
குறித்த பெண் தனது மருமகனுடன் மட்டுவில் பகுதியில் உறவினர் ஒருவரின் மரண சடங்கில் கடந்த 12ஆம் திகதி கலந்து கொண்டு வீடு திரும்பும் போது வீதியில் வெற்றிலை துப்பிய வேளை தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்து மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். #வீதி #வெற்றிலை #மரணம்
Spread the love