பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காவல்துறையினா் விசாரணை செய்யும் நடவடிக்கைகளை கண்டிப்பதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக பேரெழுச்சி இயக்கத்தினர் மேலும் தெரிவித்ததாவது;
பொத்திவில் தொடங்கி பொலிகண்டிவரை மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களை காவல்துறையினா் பல்வேறு காரணங்களை கூறி விசரைணைக்கு அழைக்கிறார்கள். அதனால் பல அசௌகரியங்களுக்கு மக்கள் உள்ளாகிறார்கள் .
பொதுமக்கள்,மதகுருக்கள், கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விசாரணைக்கு அழைக்கிறார்கள். இச்செயற்பாடுகள் இந்த நாட்டில் ஜனநாயக இடைவெளியை மேலும் அதிகமாக்கும் .
இந்த பேரணி வன்முறைகள் எதுவும் இன்றி மிக ஒழுக்கமாக அகிம்சை ரீதியில் இடம்பெற்றது . எனவே நாட்டின் குடிமக்களாக நாமும் சுதந்திரமாக வாழ இந்த நாட்டில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் வழிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர் #பொத்துவில் #பொலிகண்டி #பேரணி #ஜனநாயக #மக்கள்பேரெழுச்சிஇயக்கம்
—