உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ள சகல முன்மொழிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையை ஆராய குழுவொன்றினை அமைப்பது அவசியம் இல்லை எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நீதியை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர், குண்டு தாக்குதலை மேற்கொள்ளத் திட்மிட்ட மற்றும் அதற்கு உதவி புரிந்த சக்திகளை முதலில் கண்டறிய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு- கட்டுவபிட்டிய தேவாலயத்திற்கு முன்பாக பிரதேசவாசிகள் நேற்று (20) நீதிகோரி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினையடுத்து அங்கு சென்ற போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி பேராயரை சந்திக்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளாா்.
உயிர்தத ஞாயிறு தின தாக்குதல் உட்பட நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா். #பேராயர் #உயிா்த்தஞாயிறு