உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவனெல்லை பிரதேசத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளாா்.
குறித்த 15 பெண்களில் 5 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் ஏனையவர்கள் தற்போது விளக்கமறியலிலும் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் உள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா். #உயிர்த்தஞாயிறு #தற்கொலைத்தாக்குதல் #பெண்கள் #அஜித்ரோஹண #சஹ்ரான்