1952 களில் வங்க தேசத்தில்வங்களா மொழியை தங்கள் தாய்மொழியாக அறிவிக்கும் படிஇடம் பெற்;ற போராட்டத்தில் நான்கு நபர்கள் உயிர்நீத்தனர். அதன் நினைவாக பெப்பவரி 21 இனை தாhய்மொழி தினமாக கொண்டாட யுனெஸ்கோ அறிவித்தது. இதனை முன்னிறுத்தி உலகம் முழுவதும் தாய் மொழிதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
எழுத்து மொழி, பேச்சு மொழி, செய்கை, குறிப்பிட்ட குலத்தின் குலக்ககுறி அடையாளங்கள் இவை அனைத்தினையும் உள்ளடக்கியதே மொழி என்னும் தொகுதியாகும். மொழி சமூகத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியைப் பேணுவதாக, வரலாற்றை தக்கவைப்பதாக செயற்படுகின்றது. ஓவ்வொரு சமூகமும் தன் அறிவு மரபினை மொழியினுடாகவே கடத்துகின்றது. மொழியின் அழிவு என்பது சமூகத்தின் பாரம்பரியத்தின் வரலாற்றின் அழிவாகும்.
இவ்வருடஉலக தாய் மொழி தினக் கருத்தியலாகமூண்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்கான நண்பர் குழுவினர் ‘தமிழிசையால் இணைவோம்’ என்னும் தொனிப்பொருளை முன்வைத்துள்ளனர். இத் தொனிப்பொருளில் மட்டக்களப்பு, மலையகம், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று காலை 9.00 மணி தொடக்கம் 10.30 வரை நாவற்குடா சிறுவர்களுடன் இணைந்து மூண்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்கான நண்பர் குழுவினர் பாமினி அமுதன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சகாயநாதன் யென்ஸி அவர்களின் வீட்டில் தாய் மொழி தினத்தினை கொண்டாடினார்கள்.
இன்றைய சிறுவர்கள் நாளைய சமூக இருப்பிற்கு அடிப்படையானவர்கள். அனைவரும் இணைந்து வாழும் அதிகாரமற்ற வன்முறையற்ற உலகை சிறுவர்களுக்கு கையளிப்பதில் அனைவரும் பொறுப்புடையவர்கள். அதேவேளை வன்முறையற்ற மனிதராய் இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமான சுயமான வாழ்தலை வாழ்தல் என்பதும் சிறுவர்களுக்கு அடிப்படையானது. இத்தகைய வாழ்க்கை முறைக்கு வழிநடுத்துபவர்களாக பெரியவர்கள் செயற்படுதல் வேண்டும் என்பதும் முக்கியமானது.
அவ்வகையில் மனிதருடன் மனிதர் இணைந்து வாழ்வதற்கான வன்முறையற்ற மொழியை பயன்படுத்துவது அவசியமானது. தம் மொழியால் சிந்திப்பதும் பிறரை புரிந்து கொள்வதும் நாம் நம் மொழியை மதிப்பது போல் பிற மொழியை மதிப்பதும் நம் மொழியில் கற்பனைத்திறன், படைப்பாகத்திறன் கொண்டவராய் நம்மை வளர்த்துக் கொள்ளல் என்பதும் அவசியமானது.
இவ் வகையில் தம்மொழிப் பயன்படுத்தலின் தேவையை உணரச் செய்வதோடு தன் மொழியில் சிந்திப்பதும் படைப்பாக்கமுள்ள மனிதராய் வன்முறையற்றவராய் இயற்கையுடன் இணைந்து வாழும் மனித உருவாக்கத்த்pனை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தாய்மொழி தினக் கொண்டாட்டம் அமைந்திருந்தது.
இந்நிகழ்வானது மூண்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்கான நண்பர் குழுவினர் சிறுவர்களுடன் இணைந்து பல்வேறுபட்ட பயிற்சி பட்டறைகளில் உருவாக்கப்பட்ட பாடல்களைப் பாடியதோடு தம் சூழலில் வாழ்ந்து மறைந்த மொழி ஆளுமையாளர் பற்றிய கருத்துக்களையும் சிறுவர்களுக்கு வழங்கினார்கள்.அத்துடன் இன்றைய நாளின் ஞாபகப்படுத்தலாக முட்டைக்கோது, நம் வீடுகளில் பயன்தரும் தாவரங்களின் காய்ந்த இலைகள் போன்றவற்றைக் கொண்டு சிறு சிறு கைவினைப் பொருட்களையும் சிறுவர்கள் ஆக்கினார்கள். இவ்விதமாக தாய்மொழி தின நிகழ்வு நிறைவடைந்தது.
கலாவதி கலைமகள்
சிந்துஉசா விஜயேந்திரன்.