தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பா நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை தொடா்பில் காவல்துறையினா் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று (திங்கட்கிழமை) இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். #சுமந்திரன் #வாக்குமூலம் #பதிவு