161
மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த 2 இலட்ச ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அச்செழு பகுதியை சேர்ந்த இளம் வர்த்தகர் கடந்த 19ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். அவரது இறுதி கிரியைகள் நேற்றைய தினம் நடைபெற்றது. அதன் போது, மரண சடங்கு செலவுகளுக்காக வீட்டினுள் இருந்த 2 இலட்ச ரூபாய் பணம் திருட்டு போயுள்ளது.
இது தொடர்பில் குடும்பத்தினரால் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. #மரணசடங்கு #பணம் #திருட்டு #அச்செழு
Spread the love