கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களின் இறுதிக்கிரியைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை, சுகாதார அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள நீதியமைச்சர் அலி சப்ரி, அது தொடர்பான அபிப்பிராயத்தைத் தான் முன்வைக்க முடியாதென்றும் அது சுகாதார அதிகாரிகளின் பொறுப்பு எனவும் தொிவித்துள்ளாா்.
நீதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தொிவித்துள்ளாா்.
மேலும் அங்கு கருத்துரைத்த அவா் நீதி அமைச்சராகத் தான் பதவி வகிக்கும் வரை, பௌத்த விகாரைகள், தேவாலயங்கள் குறித்த சட்டத்தில் கை வைப்பதனை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை எ எனத் தொிவித்துள்ளாா்.
மேலும் முகத்தை மூடும் புர்காவைத் தடைசெய்தல், முஸ்லிம் திருமணச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியன முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தொிவித்த அவா் சிங்கள- பௌத்த மக்களின் பாரம்பரிய உரிமைகளுக்கெதிராகச் சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
இலங்கை, 2500 வருடம் பழைமையான பௌத்த நாகரிக வரலாற்றைக் கொண்ட நாடு என்பதனால் இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவர முடியுமா எனக் கேள்வியெழுப்பிய அவர், அவ்வாறானதனைக் கொண்டு வருவதற்கு தான் முட்டாள் இல்லை எனவும் தொிவித்துள்ளாா்.
முஸ்லிம் சட்டத்தைத் திருத்துவதற்கான யோசனை, அமைச்சரவையில் நவம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க கூடாது, ஆண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்படுவதற்கான சம உரிமையை அளிப்பது உள்ளிட்ட திருத்தங்களும் கொண்டுவரப்படவுள்ளது. இது, ஒவ்வொரு சமூகத்தினரையும் இலக்காகக் கொண்டு தீர்மானிக்காமல், நாட்டின் பாதுகாப்புக் குறித்துச் சிந்தித்தே, இந்தத் திருத்தம் செய்யப்படவுள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தொிவித்துள்ளாா். #புர்கா #தடை #முஸ்லிம்_திருமணச்சட்டம் #அலிசப்ரி