அத்துமீறலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட, பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று, தீா்வு காண்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவில் வைத்து ஊடகங்கவியலாளா்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தொிவித்துள்ளாா்.
இந்திய மீனவர்களின் வருகை நிரந்தரமாக காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில்முடக்கம் முற்கொள்வதுடன் அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் எனவும் தொிவித்திருககின்றாா்கள்.
அதற்கு தான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அது ஒரு நியாயமான கோரிக்கை என்பதனால் அதனை விரைவில் தீர்க்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்த அவா் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று அந்த பிரச்சனையை தீர்ப்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்கின்றேன் எனவும் அவா் தொிவித்தாா். #இந்தியமீனவர்கள் #அத்துமீறல் #டக்ளஸ்_தேவானந்தா