யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51 கைதிகள் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று 236 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51 கைதிகள் உட்பட 52 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 150 கைதிகளிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 51 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒரு வாரத்தில் 61 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்
மேலும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவரது கணவர் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக கொழும்பில் பணியாற்றுவிட்டு வந்திருந்தார்.
அதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 463 பேரின் பிசிஆர் பரிசோதனையில் 9 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 நோயாளிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கொடிகாமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் மன்னார் பொது வைத்தியசாலை சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் என மூவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 81 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கும் அவரது பேரனுக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் #யாழ்_சிறைச்சாலை #கைதிகள் #கொரோனா #பிசிஆர்