யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார்.
புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் , நேற்று இரவு தந்தை – மகனுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட மகன் தலைமறைவாகியுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மகனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்தனர். #மனநிலை_பாதிக்கப்பட்ட #மகன் #தந்தை #உயிரிழப்பு