மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் போது நேற்று புதன்கிழமை மட்டும் ஒரே நாளில் குறைந்தது 38 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதனையடுத்து இதனை ஒரு ரத்தம் தோய்ந்த நாள் என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
மியன்மாரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளிவருவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் தொிவித்துள்ளாா்.
பாதுகாப்புப் படையினர், ரப்பர் மற்றும் உண்மையான குண்டுகளால் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
போராட்டங்கள் நடந்ததில் இருந்து இதுவரை குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஷ்ரானர் தெரிவித்துள்ளார்.
நிராயுதபாணியான தன்னார்வ மருத்துவப் பணியாளர் ஒருவரை காவல்துறையினா் அடிப்பது காணொளி ஒன்றில் தெரிகிறது என்றும் ஒரு போராட்டக்காரர் தெருவிலேயே சுடப்படுவதை மற்றொரு காணொளி காட்டுகிறது எனவும் வொ் குறிப்பிட்டுள்ளா்ா.
யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கொல்லப்பட்டவர்களில் 14 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞா்களும் 19 வயது பெண் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் சேவ் த சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளதுடன் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #மியன்மார் #போராட்டக்காரா்கள் #சுட்டுக்கொலை #ராணுவ_ஆட்சி #ஆங்சான்சூகி