192
“நாடும் தேசமும் உலகமும் அவளே ” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.
இதன்போது யாழ் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #சர்வதேசமகளிர்தினம் #நிகழ்வுகள் #நாடும்_தேசமும்_உலகமும்_அவளே #கண்காட்சி
Spread the love