2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசததில் இளைஞன் ஒருவனை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
போலியான சாட்சிகளை தயாரித்தல் மற்றும் சாட்சிகளை மறைத்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி திலும் குமார மற்றும் உதவி காவற்துறை அத்திட்சகர் சுதத் அஸ்மடல ஆகியோர் மீது அதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.