வட மாகாணம் முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. எனினும் மன்னார் தீவு பகுதியில் மின்சார தடை ஏற்படவில்லை என்றபோதிலும் மன்னார் பெருநிலப்பரப்பில் ஒருமணிநேரம் ஏற்பட்ட மின்சார தடை பின்னா் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்சார தடைக்கு தொழிநுட்ப கோளாறே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. #மின்சார_தடை #வடமாகாணம்