தன்னை கடத்திச் சென்றதாக போலியான முறைப்பாட்டை செய்த சுவிட்ஸர்லாந்து தூதரக அலுவலகத்தில் சேவையாற்றிய கானியா பெரிஸ்டர் பிரான்சிஸ் எனும் அதிகாரிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (09) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதிவாதியான கானியா பெரிஸ்டர் பிரான்சிஸ் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவாிடம் சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து முன்பிணை அடிப்படையில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளது #சுவிட்ஸர்லாந்து #தூதரகஅதிகாரி #குற்றப்பத்திரிகை #கானியா_பெரிஸ்டர்