உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன் இன்று (10) குற்றப்புலனாய்வுதிணைக்களத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளாா்.
இது தொடர்பில் அவரை விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு சி.ஐ.டி யினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவா் தொிவித்து்ளாா்.
ரிஷாட்பதியுதீனின் சகோதரர், தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். அந்த அழைப்பின் பின்னர், அவர் தனது சகோதரரான ரிஷாட் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் அவர் சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இந்த விடயத்தை காவல்துறையினா் எம்மிடம்தெரிவிக்கவில்லை. மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடமே தெரியப்படுத்தியுள்ளனர்.
அவரது சகோதரர் கைதான போது, ரிஷாட் அதனை வியாபார ரீதியிலான தொலைபேசி அழைப்பு என்று கூறியுள்ளதாக அமைச்சர் விமல்வீரவன்ச நேற்று (09) இடம்பெற்ற “இஸ்லாமிய அடிப்படைவாதம்: உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுக்கு அப்பால்” – பொதுபிரச்சாரம்’ என்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #உயிர்த்தஞாயிறு #சஹ்ரானுடன் #விமல்வீரவன்ச #ரிஷாட் #முறைப்பாடு