மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நேற்றையதினம் திருக்கேதீச்சர ஆலய முன்றலில் சிவராத்திரி விழாவின் போது ஏழாலையுர் இளையதம்பி செல்வ சந்திரனின் பஞ்ச ஈச்சரங்கள் மீது பாடப்பட்ட பாடல் இறுவெட்டு வெளியிட்டு வைக்கபட்டுள்ளது.
யாழ் ஏழாலையுர் இளைய தம்பி செல்வச்சந்திரன் எழுதிய பாடல்கள் இசைக்கோன் பகவதி கருணாகரனின் இசையமைப்பில் ஈழத்து பாடகர்களால் பாடப்பட்ட இறுவெட்டினை திருக்கேதீஸ்வர ஆலய பிரதமகுரு வெளியிட்டு வைக்க மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் பெற்றுக்கொண்டார்
தொடர்ந்து சிறப்பு பிரதிகளை மாந்தை பிரதேச செயலாளர் பிரதீப் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பு அதிதிகள் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையில் பாடல் பெற்ற தலங்களான திருக்கோணேச்சரம் , திருக்கேதீச்சரம் ,முன்னேச்சரம் ,நகுலேச்சரம் ,ஒட்டுசுட்டான் தான்தோன்றிஈச்சரம் ஆகிய பஞ்ச ஈச்சரங்களின் தொன்மை வரலாறுகளை கூறும் வகையில் பாடப்பட்ட முதலாவது பாடல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #செல்வசந்திரன் #பஞ்சஈச்சரங்கள் #இறுவெட்டு #திருக்கேதீஸ்வர #சிவராத்திரி