221
நாட்டுக்குள் வஹாபி, ஜிஹாத் கருத்துக்களைப் பரப்பியதாகத் தொிவித்து ஜமாதே இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய முஸ்லீம்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் மோதல்களை உருவாக்கும் வகையிலும் குறித்த அமைப்பு சஞ்சிகைகளை வெளியிட்டிருப்பதாகவும் அவா் மேலும் தெரிவித்துள்ளார். #ஜமாதேஇஸ்லாமியஅமைப்பு #தலைவர் #கைது #அஜித்_ரோஹண
Spread the love