பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கெதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது

இலங்கைக்கெதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணஜ தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதல்லி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து, 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 274 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. #இலங்கை #மேற்கிந்தியதீவுகள் #கிரிக்கெட்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.