தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்படும் நபர்களை மறுவாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ஏற்கனவே கைதாகி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இந்த புதிய விதிமுறைகளுக்குள் உள்வாங்கப்படுவார்களா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.