மியன்மாரில் ராணுவத்துக்கு எதிராக யாங்கூன் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் பலியாகியுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சீன தூதர அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மியன்மார் போராட்டத்தில் 80க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளதுடன் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #மியன்மார் #போராட்டக்காரா்கள் #சுட்டுக்கொலை #ராணுவ_ஆட்சி #ஆங்சான்சூகி