230
தென்மேற்கு சீனாவில் 4 கிலோ மீற்றர் கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவில் வௌவால் வைரசுகள் பற்றி ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.
அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுடன் தொடர்புடையவை என்றும் அவற்றில் ஒரு வைரஸானது கொரோனா வைரஸின் மரபணுவை சுமந்திருந்தது என்பதும் அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
Spread the love