தடுப்பூசி போட்டு இரு வாரங்களின் பின்னர் இலங்கைக்கு செல்லும் பயணிகள், அங்கு சென்றதன் பின்னா் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவைப் பெற்றதன் பின்னா் வீடுகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தடுப்பூசி போடாத பயணிகளை ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வெளியிடப்பட்டடுள்ள வெளிநாடுகளிலிருந்து செல்லும் இலங்கையர்கள் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய மறுசீரமைக்கப்பட்ட புதிய சுகாதார நடைமுறைகள் தொடா்பான வழிகாட்டியிலேய இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியை பெறாமல் செல்வோா் முதலாவது நாள் மற்றும் ஏழாவது நாளில் பிசிஆா் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் ஏழாவது நாளில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய முடியும் எனவும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் காலப்பகுதியின் எஞ்சிய நாட்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் நிறைவு செய்ய வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் செல்பவா்கள் விமான நிலைய வைத்திய அதிகாரியிடம், தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழின் முதற்பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அவைஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளில் காணப்பட்டால் உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தகைய பயணிகளை அரச அதிகாரிகள் தனிமைப்படுத்தல் விடுதிகள் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் சுகாதார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட தனியார் அல்லது அரச இரசாயனக்கூடமொன்றில் பிசிஆா் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அதன் பெறுபேறுகள் கிடைத்தவுடன் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி வீடுகளுக்கு செல்ல வெண்டும் என்பதுடன், தமது தனிமைப்படுத்தல் செயற்பாடு குறித்து பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டியதும் அவசியமாகும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #இலங்கையர்கள் #சுற்றுலாபயணிகள் சு#காதார_நடைமுறைகள் #தடுப்பூசி