153
வட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை தபால் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வலவினால் திறந்து வைக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை அத்தியடிப்பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் 11.6 மில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக தபாலக அலுவலகம் அமைக்கப்பட்டது.
வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அஞ்சல் மற்றும் ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர உள்ளிட்டோர் பங்கேற்றனர் #வட்டுக்கோட்டை_தபாலகம் #திறப்பு #ஹெகலியரம்புக்வல
Spread the love