பாரிஸ் பிராந்தியம் உட்பட 16 மாவட் டங்களில் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வருகின்ற பொது முடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிலை யங்கள் மூடப்படவுள்ளன.
அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படு கின்ற போதிலும் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் வழமை போன்று திறந்து இயங்க முடியும் என்று அரசாங்கப் பேச் சாளர் கப்ரியேல் அட்டால் தெரிவித்திருக் கிறார்.கடந்த பொது முடக்க காலங்களில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு வந்தன. இம்முறை அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
புத்தகக் கடைகள் அத்தியாவசிய வர்த்தக நடவடிக்கைகளோடு சேர்க்கப்பட்டிருப்ப தால் அவற்றையும் திறக்க முடியும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட முன்னர் மூடப்படும் பட்டியலில் இடம் பெற்றுவந்த பல வர்த்தக நிலையங்கள் இந்தத் தடவை திறப்பதற்கு அனுமதிக் கப்பட்டுள்ளன.
நான்கு வாரங்கள் நீடிக்கவுள்ள பொது முடக்க காலப்பகுதியில் திறந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்ற
வர்த்தக நடவடிக்கைகளின் விவரம் வருமாறு :
*les garages automobiles(வாகனம் கழுவும் இடங்கள்)
*les vendeurs et réparateurs de vélos (சைக்கிள் விற்பனை மற்றும் திருத்தும் இடம்)
*les loueurs de voitures(கார் வாடகைக்கு வழங்கும் நிலையங்கள்)
*les stations-service(வாகன தரிப்பிட சேவைகள்)
*les magasins de bricolage et les quincailleries
*les supérettes, supermarchés et hypermarchés( சுப்பமார்க்கற், ஹிப்பர் மார்க்கற்)
*les magasins de produits surgelés(உறை குளிர் உணவு விற்பனை நிலையங்கள்)
*les magasins de fruits et légumes(பழங்கள், மரக்கறி கடைகள்)
*les magasins de produits pour animaux (வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுக் கடைகள்)
*les magasins de fournitures agricoles
*les boucheries-charcuteries et les poissonneries(இறைச்சி, மீன் கடைகள்)
*les boulangeries-pâtisseries et les confiseurs(பேக்கறிகள்)
*les vendeurs et réparateurs d’ordinateurs et de matériel de télécommunications(கணனி மற்றும் தொலைத்தொடர்பு, தொடர்பாடல் கருவிகள் விற்பனை நிலையம்)
*les bureaux de tabac et les vendeurs de cigarettes électroniques(எலக்ரோனிக் சிகரெட் விற்பனை, Tabac)
*les banques et les assurances(வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள்)
*les services funéraires(இறுதிச் சடங்கு, அந்திமகால சேவைகள்)
*les blanchisseries-teintureries(சலவை மற்றும் அயனிங் நிலையங்கள்)
*les magasins de textiles(புடைவை விற்பனை)
*les libraires et les disquaires(புத்தகம் இறுவட்டு விற்பனை)
*les vendeurs de journaux et de papeterie(பத்திரிகை மற்றும் காகிதாதிகள் விற்பனை நிலையம்)
*les salons de coiffure(சிகையலங்கரிப்பு நிலையங்கள்)
*les opticiens(மூக்குக் கண்ணாடிக் கடைகள்)
*les pharmacies
les vendeurs d’articles médicaux et orthopédiques(மருந்தகங்கள் மற்றும் மருத்துவ பொருள்கள் விற்பனை)
குமாரதாஸன். பாரிஸ்.
19-03-2021