இராணுவத்தின் தலைமை அதிகாரி
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மேலும் உதவிகளை வழங்க இராணுவம் தயாராகவே உள்ளது. பிரெஞ்சு இராணுவத்தின் பிரதம தலைமை அதிகாரி (Chief of Staff) General François Lecointre இவ்வாறு தெரிவித்தி ருக்கிறார். ஓராண்டாக நீடிக்கும் வைரஸ் காரணமாக இதுவரை தொற்றுக்கு இலக்காகி “ஒரு சிப்பாய் கூட உயிரிழக்க வில்லை” என்ற தகவலையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
வைரஸ் தடுப்பு சுகாதாரப் பணிகளில் இராணுவம் மேலும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று நாட்டின் நாற்பது சத வீதம் மக்கள் விரும்புகின்றனர் எனக் கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகி
இருக்கிறது. அது குறித்து BFM தொலைக் காட்சி இராணுவத்தின் தலைமை அதி காரியிடம் கருத்துக்கேட்டது.அச்சமயமே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இத்தாலி போன்று பிரான்ஸில் சுகாதாரப் பணிகளை இராணுவம் பொறுப்பேற்க வேண்டிய நிலைமை இன்னமும் உருவா கவில்லை என்றும் படைகளின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் வைரஸ் தடுப்புப் பணிகளில் தங்களது இராணுவத்தை பெரிய அளவில் ஈடுப டுத்தி வருகின்றன. அதுதொடர்பாகவும் பிரான்ஸின் தலைமை அதிகாரியிடம்
கேள்வி எழுப்பப்பட்டது.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தீவிர மாகப் பரவிய ஆரம்ப நாட்களில் இராணுவம் நாட்டின் கிழக்கே இராணுவ மருத்துவமனை ஒன்றை நிறுவியது.
உள்நாட்டிலும், வெளியே உள்ள பிரெஞ்சு நிர்வாகத்துக்கு உட்பட்ட தீவிகளிலும் நோயாளிகளை இடத்துக்கு இடம் மாற் றும் பணிகளிலும் இராணுவம் சுகாதாரத் துறையினருக்கு உதவிவருகிறது.
(படம் :வைரஸ் நோயாளிகளை இடம்மாற்றும் பணியில் இராணுவ வீரர்கள்.)
குமாரதாஸன். பாரிஸ்.
22-03-2021