எகிப்தின் தென் பகுதியில் உள்ள தக்தா மாவட்டத்தில் இரண்டு புகையிரதங்கள் மோதிக் கொண்டதில் 32 பயணிகள் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத தடங்கள் மோசமாக இருந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எகிப்தில் புகையிரதங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ள நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட புகையிரத விபத்தில் 300 பேர் பலியாகியுள்னர் என்பதுடன் 2017ஆம் ஆண்டில் மட்டும் எகிப்தில் 1,793 புகையிரத விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது #எகிப்து #புகையிரதங்கள் #விபத்து