மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடா்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மற்றும் 100 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவா்களை விடுவித்த நீதிமன்றம், அவா்களது வெளிநாட்டுப் பயணங்களையும் தடை செய்துள்ளது.
மேலும் வழக்கு தவணைகளுக்கு கட்டாயம் நீதிமன்றத்தில் முன்னலையாக வேண்டும் எனவும் அவ்வாறு முன்னிரையாமால் விட்டால் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் இருக்க வேண்டி ஏற்படும் எனவும் உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கினை எதிா்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை, குறித்த வழக்குடன் சேர்த்து சட்டமா அதிபரால் பிரதிவாதிகள் 11 பேருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 32 வழக்குகளுக்கான பிணை வழங்கள் தொடர்பான தீர்ப்பு இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது. #ரவி_கருணாநாயக்க #பிணை #மத்தியவங்கி #பிணைமுறிமோசடி