176
இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சில அதிகாரிகள் அரச வாகனங்களை பயன்படுத்தி தம்மை கண்காணித்து வருவதாக ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் யுத்த காலத்தில் காணாமற் போனவர்கள் தொடர்பில் அறிக்கையிடும் போது, சில ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு பிரிவினரின் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love