174
ஊவா மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட விடய தானங்களிலிருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மிலினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு , நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கூட்டுறவு விவகாரம் மற்றும் தமிழ் கல்வி தொடர்பான அமைச்சு என ஏற்கனவே இருந்த அமைச்சின் விடயங்களில் இருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
Spread the love