ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகளுக்கும் இடையே சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிவித்துரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி உட்பட 11 அரசியல் கட்சிகளின் கட்சித் தலைவர்களுக்கு இடையே இந்த கலந்துரையாடல் நேற்று (09) இரவு ஸ்ரீ.ல.சு.க தலைமையகத்தில் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்த உறுப்பினரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகக் கூறினார்.