சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய 14ஆவது ஐபிஎல் போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்தப் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற விராட் கோலி தலைமையிலான பெங்களுரூ அணி முதலில் கடளத்தடுப்பினை மேற்கொள்ளத் தீா்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து, 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ர ஓட்டங்களை எடுத்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இன்று மும்பையில் நடக்கும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் போட்டியிடவுள்ளன