தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது சென்னை காவல்துறை ஆணையாளா் அலுவலகத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினரால் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது
நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு அந்த முறைப்பாட்டியல் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் யோகிபாபு நடித்து வெளியான மண்டேலா என்ற திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் படம் முழுவதும் இடம்பெற்றுள்ளது எனவும் முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவை அமைந்துள்ளன எனவும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த முறைப்பாட்டில் தொிவிக்கப்பட்டுள்ளது