தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் மூட்ப்பட்டுள்ளது.
முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள துஇந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள்.
கம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கம்போடியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதை தடுக்க இந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிா்வரும் 20-ந்தேதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என கம்போடியாவின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.