Home பிரதான செய்திகள் 10 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி

10 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி

by admin

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத்தை 10 ஓட்டங்களால் கொல்கத்தா அணி வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 188 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை மட்டுமே எடுத்தமையினால் 10 ஓட்ட வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More