133
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 5-வது லீக் போட்டியில் மும்பை அணி 10 ஓட்டங்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை வென்றுள்ளது
நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 152 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 153 எனும் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை மட்டுமே எடுத்தமையினால் மும்பை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
Spread the love