227
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ கிராம் மஞ்சல் கட்டி மூடைகளுடன் மன்னாரைச் சேர்ந்த 5 நபர்களை இன்று (14) புதன் கிழமை(14) காலை 7.55 மணியளவில் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மஞ்சல் கட்டி மூடைகள்,மற்றும் வாகனம் என்பன இலுப்பைக்கடவை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட 5 நபர்களும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
Spread the love