புத்தாண்டு தினமான இன்றைய நாளில் யாழில் வெவ்வேறு விபத்து சம்பவங்களில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மட்டுவில் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் இயக்கி ஓட முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளுக்கு சற்று முன்பாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் சகோதரியான 2 வயது சிறுமியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணம் – கனகரத்தினம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் சகோதரர்களான இரு சிறுவர்களுடன் பட்டா வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது பட்டா வாகனத்துடன் விபத்துக்குள்ளானர்கள். அதில் 8 வயதான ஜெயரூபன் மதுசிகன் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரான 12 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பட்டா வாகன சாரதியை கைது செய்த காவல்துறையினா் யாழ்ப்பாண மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சாரதியை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.