176
முல்லைத்தீவு தண்ணீர் முறிப்பு பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
குமுழமுனை பகுதியை சேர்ந்த இருவரும் , வற்றாப்பளை பகுதியை சேர்ந்த ஒருவருமான மூன்று விவசாயிகளும் தண்ணீர் முறிப்பு பகுதியில் வயல் வேலைக்கு சென்றிருந்தனர்.
இரவாகியும் மூவரும் வீடு திரும்பாத நிலையில் , அவர்களது உறவினர்கள் அவர்களை தேடி சென்ற போது வயலில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். அது தொடர்பில் உறவினர்கள் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
Spread the love